பசுமை குடில் சீரமைப்பில் அலட்சியம்
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியில், 1.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு கடந்த ஆண்டு பசுமைக்குடில் அமைக்கப்பட்டது. சவுக்கு, தேக்கு, மலைவேம்பு, புங்கன் உள்ளிட்ட பல்வேறு வித செடிகளை உற்பத்தி செய்து, புறம்போக்கு நிலங்கள், பள்ளி, அரசு அலுவலக வளாகங்கள், சாலை, ஏரி ஓரங்களில் நட்டு பராமரித்தனர்.
இரு மாதங்களுக்கு முன் பலத்த காற்று வீசியபோது, வேப்பமரம் சாய்ந்து பசுமை குடில் சேதமானது. தற்போது அலுவலக நுழைவாயில் அருகே திறந்த
வெளியில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து வருகின்றனர். ஆனால் ஆடு, மாடுகள், நாய்களால், சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பசுமை குடிலை சீரமைக்க வேண்டும்.
இதுகுறித்து, பி.டி.ஓ., சந்திர
மலரிடம் கேட்டபோது, ''
பசுமைக்குடிலை சீரமைக்க நிதி ஒதுக்காததால், பாதுகாப்புடன் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து
வருகிறோம்,'' என்றார்.
மேலும்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்; வரி 15% குறைப்பு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
45,788 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
-
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
-
ராயனுார் சாலையில் 'இருட்டு' கூடுதல் மின்விளக்கு தேவை
-
கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் அரசு பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை