விவசாயத்தை காப்போம் விழிப்புணர்வு மாரத்தான்

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த நெல்லிகுப்பம் பகுதியில், விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

திருப்போரூர் அடுத்த நெல்லிகுப்பம் பகுதியில் நேற்று,'விவசாயத்தை காப்போம்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

இப்போட்டியில் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் 15, 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என, பலர் பங்கேற்றனர்.

மாரத்தான் போட்டி துவக்கத்தில், 'விவசாயத்தை காப்போம்' என்ற முழக்கத்துடன், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் 3 கி.மீ., துாரமும், 15, 50 வயதிற்கும் மேற்பட்டோர் 5 கி.மீ., துாரம் ஓடியும், மாரத்தான் போட்டியை நிறைவு செய்தனர்.

போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும், விவசாயிகளை கவுரவிக்கும் வகையில், விவசாயிகளுக்கு சால்வை அணிவித்து, மரக்கன்றுகள் மற்றும் மண் வெட்டி ஆகியவை வழங்கப்பட்டன.

Advertisement