'போலி' ஆரிய சமாஜ் பெயரில் திருமணம்? விசாரிக்க உ.பி., அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
பிரயாக்ராஜ்:உத்தர பிரதேசத்தில் போலி ஆரிய சமாஜ் சங்கங்கள் வாயிலாக திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறதா என்பதை விசாரிக்கும்படி, அம்மாநில அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மைனர் பெண்ணை திருமணம் செய்தது தொடர்பாக, சோனு என்கிற ஷாஹ்னுார் என்பவர் மீது பலாத்காரம், கடத்தல் வழக்கு கடந்தாண்டு பதியப்பட்டு, சம்மன் அனுப்பப்பட்டது.
கடந்த, 2020, பிப்., 14ல் திருமணம் நடந்தபோது, அந்தப் பெண் மைனராக இருந்துள்ளார். இதன் காரணமாகவே, சோனு மீது வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து ஆரிய சமாஜ் சங்கத்தில் தங்களுக்கு திருமணம் நடந்ததாகக் கூறிய சோனு, தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி பிரசாந்த் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்:
திருமணம் நடந்த நாளில் அப்பெண் மைனராக இருந்துள்ளார். எனவே, இந்த திருமணம் சட்டப்படி செல்லாது. தவிர மனுதாரரும், மைனர் பெண்ணும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்.
ஆகவே, அவர்களது திருமணம் முறையாக நடந்த திருமணமாக கருத முடியாது. உ.பி.,யின் சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் முறையாக மதமாற்றம் செய்யப்பட்டும் அந்த திருமணம் நடத்தப்படவில்லை.
தவிர, ஆரிய சமாஜ் சங்கம் இந்த திருமணத்தை நடத்தி வைத்ததாக அந்த தம்பதி தாக்கல் செய்த திருமண சான்றிதழ் போலியாக தயாரிக்கப்பட்டது போல தெரிகிறது. எனவே, அவர்கள் திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரும், அந்த பெண்ணும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது. பிரயாக்ராஜில் உள்ள ஆரிய சமாஜத்தில் இருவருக்கும் திருமணம் நடந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
தற்போதைய சட்டத்தின்படி முறையாக மதமாற்றம் செய்யாமல் திருமணம் நடந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
மாநிலத்தில் திருமணங்களை நடத்தி வைக்க போலி ஆரிய சமாஜ் சங்கங்கள் முளைத்திருக்கின்றனவா என்பதை அரசு விசாரிக்க வேண்டும். ஓராண்டில் இப்படி எத்தனை திருமணங்கள் நடந்தன என்பதை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்
-
காந்தி, பாரதியார்,மோடியை சுமப்பதில் பெருமை ; கேரள மீனவர் புதுமை
-
போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டம்; இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து
-
ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் பாதுகாவலர்களாக மாறும் காங்கிரஸ்; பாஜ விமர்சனம்
-
உ.பி.,யில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்
-
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்