பூஜாரிகள் நலச் சங்க கூட்டம்

கடலாடி : கடலாடியில் கோயில் பூஜாரிகள் நலச் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.

தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான கோயில் பூஜாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விண்ணப்பித்துள்ள பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் கிடைக்க விரைந்து தேர்வு குழு கூட்டத்தை நடத்த சென்னை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மாநில தலைவர் வாசு வலியுறுத்த வேண்டும் என தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Advertisement