பெண்கள் பாதுகாப்பு நீதிபதிகள் அறிவுரை

விழுப்புரம்: பெண்கள் சமூக வலைதளங்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்த நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மதுரை ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் பேசியதாவது:

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அவற்றிற்கான சட்டங்கள், வன்முறை தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, விரிவாக மாணவிகளுக்கு விளக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாணவிகள், தங்களை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகளை அறிந்துகொண்டு பயன்பெறுவதுடன், மற்றவர்களுக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழுப்புரம் மாவட்ட நீதிபதி மணிமொழி பேசியதாவது:

தற்போதைய சூழலில் பாலின சமத்துவம் மற்றும் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இன்றைய நவீன காலத்தில் சமூக வலைதளங்களில், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்கள் சமூக வலைதளங்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்தும், சட்டங்கள் குறித்தும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக விளக்கப்படும். மாணவிகள் மற்றும் மகளிர், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான பணிகளில் ஈடுபடுவதோடு, அதுதொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement