வீடு புகுந்து நகை திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

மதுரவாயல்,:வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய, சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரவாயல், கிருஷ்ணா நகர் முதல் பிரதான சாலையைச் சேர்ந்தவர் கலீல், 65. கடந்த 5ம் தேதி மதியம் மனைவியுடன் வடபழனி பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு சென்றார்.

மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 10 சவரன் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்தனர். இதில், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்த சூர்யா, 23, காஞ்சிபுரம் மாவட்டம் காவனுாரைச் சேர்ந்த சக்திவேல், 30,மற்றும் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டனர். சிறுவன் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான்.

அவர்களிடம் இருந்து, 7 சவரன் நகை மீட்கப்பட்டது. சூர்யா மீது காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையங்களில் ஏழு திருட்டு வழக்குகளும், சக்திவேல் மீது ஈரோடு மாவட்ட காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது தெரியவந்தது.

Advertisement