'ஐம்பெரும் ஆற்றல்கள்' நுால் வெளியீட்டு விழா

பெங்களூரு : கவிஞர் தமிழ் இயலன் எழுதிய, 'ஐம்பெரும் ஆற்றல்கள்' நுால் வெளியீட்டு விழா நேற்று பெங்களூரில் நடந்தது.

கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நேற்று பெங்களூரில் நடந்த விழாவில், கவிஞர் தமிழ் இயலன் எழுதிய 'ஐம்பெரும் ஆற்றல்கள்' நுால் வெளியிடப்பட்டது. பெங்களூரு தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், கவிஞர்கள் குடியாத்தம் குமணன், ஞால.இரவிச்சந்திரன், அறிவியல் அறிஞர் தேவி ராஜேஷ், பேராசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, தனித்தமிழ் ஆர்வலர் ஒளிமலரவன் - அல்லிமலரவன் திருமண பொன்விழாவும் நடந்தது. சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement