திருவள்ளுவர் சங்கத்தில் காமராஜர் பிறந்த நாள்

பெங்களூரு : பெங்களூரு ஸ்ரீராமபுரம் தயானந்தநகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள, பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் 123வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

சங்க தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான எஸ்.டி.குமார் தலைமையில் நடந்த விழாவில், கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் செயலர் கே.கிருஷ்ணவேணி, கர்நாடக காங்கிரஸ் பொது செயலர் எஸ்.பாலகிருஷ்ணன், பெங்களூரு மத்திய மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ஜி.ராஜேந்திரன்.

பெங்., மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ஜி.சம்பத், காந்திநகர் பிளாக் காங்கிரஸ் தலைவர் ஜெ.சரவணன், கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு துணை தலைவர் விஸ்வநாதன், தன்னுரிமை மனமகிழ் மன்ற செயலர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் போற்றி பாடப்பட்டது. சங்க இணை செயலர் லட்சுமணன் துவக்கி வைத்தார். காமராஜர் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. காமராஜர் சாதனைகள் பற்றி பேசினர்.

மாணவ - மாணவியருக்கு நோட்டு, புத்தகங்கள், ஜியோமெட்ரி பாக்ஸ்கள் வழங்கப்பட்டன. சங்க செயலர் ஆர்.பிரபாகரன் நன்றி கூறினார்.

Advertisement