குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல் : மேற்கு வங்காளம் புருலிய- திருநெல்வேலி செல்லும் அதிவிரைவு ரயிலில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா, புகையிலை பொருட்கள், வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சிறப்பு எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலான போலீஸ் சோதனை நடத்தினர். பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையில் 5.500 கிலோகிராம் குட்கா பொருட்கள், மதுபாட்டில்கள் இருந்தன. பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement