வெட்டிய தென்னை மரம் மின் கம்பத்தை சாய்த்தது

பவானி: பவானி, ஊராட்சிக்கோட்டை பேரேஜ் பஸ் ஸ்டாப் அருகில், குடியிருப்பு பகுதியில் இருந்த தென்னை மரங்களை சிலர் நேற்று வெட்டிக்கொண்டு இருந்தனர். அதில் ஒரு தென்னைமரம், அவ்வழியே செல்லும் மின் கம்பி மீது விழுந்தது. இதில் பாரம் தாங்காமல் வீட்டை ஒட்டி இருந்த ஒரு மின் கம்பம் சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.


ஊராட்சிக் கோட்டை துணை மின்நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. கம்பத்தை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் மூன்று மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. தென்னை மரம் வெட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement