போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு

1


குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை மூலம், கலைக்கு-ழுவினரை கொண்டு, வன்கொடுமை தடுப்பு, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


உதவி ஆணையர் கலால் கருணாகரன் தலைமை வகித்தார். தாசில்தார் இந்துமதி, மண்டல துணை தாசில்தார்கள் தீபதிலகை, நீதி-ராஜன் முன்னிலை வகித்தனர். கலைக் குழு-வினர் முலம் வன்கொடுமை தடுப்பு மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆடல், பாடலுடன் நடந்தது. இதேபோல் தரகம்பட்டி, மண்மங்கலம், கரூர் பஸ் ஸ்டாண்டில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன

Advertisement