45,788 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
கரூர்: -''மாவட்டத்தில் இதுவரை, 45,788 பேருக்கு, இல-வச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்-ளது,'' என, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி தெரி-வித்தார்.
கரூர் அருகே, மண்மங்கலம் அட்லஸ் கலைய-ரங்க விழாவில், பொதுமக்களுக்கு இலவச வீட்-டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி வழங்கி பேசியதாவது:
மாநகராட்சி, நகராட்சி உள்பட உள்ளாட்சிகளில், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் பொதுமக்களுக்கு ஒருமுறை பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாவட்டத்தில், 45,788 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், இது-வரை வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவல-கத்தில் மனுக்களை வழங்கி நீண்ட காலமாக பட்-டாக்கள் இன்றி சிரமப்பட்ட காலம் மாறியுள்ளது. வருவாய்த்துறை சார்பில் நேரடியாக சென்று விசாரணை செய்கின்றனர். பின், நில அளவை செய்து அதற்கான பட்டாக்களை தயார் செய்து வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, ஈசநத்தத்தில், 37.67 லட்சம் ரூபாயில், ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி, பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹா-ரத்தில், 1.40 கோடி மதிப்பீட்டில் திறந்தவெளி கிணற்றில், 30 எச்.பி., நீர்மின் மோட்டார் பொருத்தி பம்பிங் லைன் அமைக்கும் பணி, ஆண்டாங்கோவில் குடித்தெருவில், 12.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமராவதி ஆற்றில், படிக்-கட்டு பணி உள்பட மொத்தம், 2.90 கோடி மதிப்-பீட்டிலான, 10 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை, கரூர் எம்.எல்.ஏ.,செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
டி.ஆர்.ஓ., கண்ணன், மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மண்டலக்குழு தலை-வர்கள் கனகராஜ், சக்திவேல், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு ஆதார் அட்டையை நிராகரிக்க கூடாது; சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ஆபரேஷன் சிந்தூர் பற்றி எதிர்க்கட்சிகள் விவாதம்; காங்., சார்பில் பங்கேற்க சசிதரூர் மறுப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி!
-
30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்?
-
பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள்; எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல்
-
தாய்லாந்து மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் சுட்டுக்கொலை