கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்

சென்னை: ''கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல. அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில், சீமான் பேசியதாவது: கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல, X,Y,Z பிரிவு பாதுகாப்பு. ஏய் சிரிக்காதீங்க. சத்தியத்தின் மகன் நான் சத்தியம் தான் பேசுவேன். ஒன்னுமே இல்லாத எல்லா பயலுக்கும் z,y பிரிவு பாதுகாப்பு. அப்படி துப்பாக்கி, இப்படி துப்பாக்கி. நாட்டின் முதல்வர் வண்டி போய் கொண்டு இருக்கிறது. வண்டிக்கு முன் அபாய சங்கு ஊதிக்கொண்டு பைலட் வாகனம் செல்கிறது. அதைப் பார்த்ததும் நிறுத்தச் சொல்கிறார் காமராஜர்.
நம்ப முடிகிறதா
ஏய் நான் என்ன பாகிஸ்தானிலா போகிறேன். சொந்த நாட்டில் போவதற்கு ஏன் Y பாதுகாப்பு. தண்ட செலவு, போலீஸ் ஸ்டேஷனில் வண்டியை நிறுத்துங்கள் என கூறினார். இப்படி ஒரு தலைவன் வாழ்ந்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒரு தலைவன் வாழ்ந்தான். இன்னொரு தலைவன் வாழ்வான். அவருடைய பேரன் சீமான் தான் வாழ்வான். வேறு யாராலும் முடியாது.
உயிருக்கு பயந்தால்....
என்னிடம் உங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது, பாதுகாப்பு என்று கேட்பார்கள், நாட்டிற்கே நான் தான் பாதுகாப்பு, எனக்கு என்ன பாதுகாப்பு. ஒரு தலைவன் தனது உயிருக்கு பயந்தால், அவன் எப்படி மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பான். உயிருக்கு பயப்படும் கோழை எப்படி நாட்டிற்கு தலைவன் ஆக முடியும். நாட்டிற்கும், மக்களுக்காகவும் உயிரை கொடுக்க, துணிந்து இருப்பவன் தான் தலைவனாக இருக்க முடியும்.
ஒரு ஓட்டு...
அப்படி இருந்த தலைவன், காமராஜர் தான். வேறு யார் இருக்கா, எவ்வளவு நாட்கள் ஆனாலும் அவர் புகழை பாடி கொண்டே இருக்கலாம். இதை பேசுவதனால் என் சொந்தக்காரன் எல்லாம் எனக்கு ஓட்டு போட்டுரு என்று பேசவில்லை. ஒரு ஓட்டு எவனாவது போட்டியா? இந்தியாவிலேயே ஒரு அரசியல் தலைவன் சொந்த ஜாதியால் நிராகரிக்கப்பட்ட ஒரே மகன் நான் ஒருவன் மட்டும் தான் இருக்கேன்.
தமிழக அரசியல்
யாருமே போடாமல் 36 லட்சத்தி 50 ஆயிரம் ஓட்டை பெற்று 3வது கட்சியாக வந்து நிற்கும் ஒரே மகன், இந்த தமிழக அரசியல் வரலாற்றில் நான் தான் இருக்கேன். என்னை யாரையும் கூப்பிட மாட்டார்கள்.
@quote@காமராஜர் என்கிற ஒரு தலைவன் நாடார் ஜாதிக்கு என்று எண்ணுவது போன்று அவரை சிறுமைப்படுத்துவது உலகத்தில் ஒன்றுமில்லை. எந்த கொம்பனும் அவர் திறந்த பள்ளியில் படித்தவர்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. quote
அப்துல் கலாம் வந்து படித்து விஞ்ஞானி ஆகி என்று பேசி கொண்டு இருக்கிறோம். அது காமராஜர் திறந்த பள்ளிக்கூடம் தான். இவ்வாறு சீமான் பேசினார்.










மேலும்
-
அசாமில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
-
உலக கோப்பை செஸ்: திவ்யா சாம்பியன்
-
பஹல்காமில் பயங்கரவாதிகள் அத்துமீறியது எப்படி: பார்லி விவாதத்தில் காங்கிரஸ் கேள்வி
-
கேரளா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து; பயணிகள் 30 பேர் கதி என்ன? மீட்கும் பணி தீவிரம்
-
பீஹாரில் குட்ட பாபு என பெயரிட்டு நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வினியோகம்: விசாரணைக்கு உத்தரவு
-
வரலாற்றுச் சாதனை படைத்த ஆபரேஷன் சிந்துார்: லோக்சபாவில் ராஜ்நாத் சிங் பேச்சு