2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி

ராமேஸ்வரம்: ''கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில் உலகில் 3வது இடத்தில் இந்தியா உள்ளது. 2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்,'' என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பேசினார்.
ராமேஸ்வரத்தில் நடந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் காலம் நினைவு நாள் நிகழ்வில் அவர் பேசியதாவது: அரசு பள்ளி, கல்லுாரியில் படித்து கடின முயற்சி யால் 1984 பிப்.,1ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (இஸ்ரோ) சேர்ந்தேன். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அக்னி சிறகுகள் புத்தகம் விண்வெளி துறையில் சாதிக்க துாண்டியது. 1980ல் ஏவப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக சென்றது.
இதன் மூலம் விண்வெளித்துறையில் 6வது நாடாக இந்தியா சாதித்தது. அப்போது இத்திட்டத்தின் இயக்குநராக அப்துல் கலாம் இருந்தார். இஸ்ரோ வில் சாதாரண தொழில்நுட்ப கலைஞர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை அன்பாக பேசி பழகக்கூடிய மாமனிதர் அப்துல்கலாம்.
ஜூலை 30 இஸ்ரோ வுடன், நாசா இணைந்து அதிநவீன நிசார் எனும் ராக்கெட் ஏவப்பட உள்ளது. நம் சேட்டிலைட் தகவல்களால் 9 லட்சம் இந்திய மீனவர்கள் பயனடைகின்றனர். இதன் மூலம் மீனவர் களுக்கு ஓராண்டுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.
சிந்துார் ஆப்பரேஷன் வெற்றியில் இஸ்ரோ முக்கிய பங்கு வகித்தது. கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில் உலகில் 3வது இடத்தில் இந்தியா உள்ளது. 2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும் என்றார்.
எல்.வி.எம்., - 3 ராக்கெட் மாதிரி பரிசு இஸ்ரோ உருவாக்கி வரும் கனரக சேட்டிலைட்டை துாக்கி செல்லும் ராக்கெட் மாதிரியை இஸ்ரோ தலைவர் நாராய ணன், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உற வினர்களுக்கு பரிசாக வழங்கினார்.
இந்த எல்.வி.எம்., -3ல் நம் நாட்டில் தயாரித்த கிரையோ ஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்டு விரைவில் செலுத்தப்பட உள்ளது. இது விண்வெளிக்கு மனிதன் செல்லும் ககன்யான், சந்திரயான் ஆய்வு திட்டங்களுக்கு பயன்பட உள்ளது.



மேலும்
-
பீஹாரில் குட்ட பாபு என பெயரிட்டு நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வினியோகம்: விசாரணைக்கு உத்தரவு
-
வரலாற்றுச் சாதனை படைத்த ஆபரேஷன் சிந்துார்: லோக்சபாவில் ராஜ்நாத் சிங் பேச்சு
-
வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு ஆதார் அட்டையை நிராகரிக்க கூடாது; சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ஆபரேஷன் சிந்தூர் பற்றி எதிர்க்கட்சிகள் விவாதம்; காங்., சார்பில் பங்கேற்க சசிதரூர் மறுப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி!
-
30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்?