முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1972--73ல், பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவியர், 30 பேர், 53 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சந்தித்து கொண்டனர். இதில் பலர் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். தாங்கள் படித்த வகுப்பறை, விளையாடிய இடங்களை பார்வையிட்டு, பழைய நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்தனர்.


ஆசிரியர்களை பள்ளிக்கு அழைத்து கவுரவித்தனர். பள்ளி வளர்ச்சிக்காக பாடுபடும் முன்னாள் மாணவர் சங்கத்துக்கு, 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினர்.

Advertisement