சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு மாநாடு

ஈரோடு: பத்து ரூபாய் இயக்கம், சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில், சமூக ஆர்வலர் பாதுகாப்பு மாநாடு ஈரோட்டில் நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சதீஸ்குமார் வாழ்த்துரை வழங்கினார். பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜூ உரையாற்றினார்.


நிருபர்கள் சந்திப்பில் நல்வினை விஸ்வராஜூ கூறியதாவது: சமுக நலன் பாதுகாப்புக்காக மத்திய அரசின் இடித்துரைப்பாளர் பாதுகாப்பு சட்டத்தை, தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களுக்காக போராடும் சமூக ஆர்வலர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். ஆர்.டி.ஐ., சட்டத்தை ஏஜென்சிகள் நீர்த்து போக முயற்சிக்கின்றனர். இச்சட்டத்தில் திருத்தம் தேவையில்லை. முறையாக நடைமுறைப்படுத்தினாலே போதும். இவ்வாறு கூறினார்.

Advertisement