ஆடிக்காற்றால் முறிந்த மரக்கிளை

கோபி: கோபி, நஞ்சகவுண்டம்பாளையம், நல்லகவுண்டம்பாளையம், நாதிபாளையம், கரட்டடிபாளையம், புதுவள்ளியாம்பாளையம், மூலவாய்க்கால், போடிசின்னாம்பாளையம், கோவை பிரிவு, காசிபாளையம், அக்கரை கொடிவேரி உள்ளிட்ட பகுதியில், நேற்று காலை 10:30 மணி முதல், பலத்த காற்று வீசியது. பல இடங்களில் தென்னை மற்றும் வாழை மரங்கள், தாக்குப்பிடிக்க முடியாமல் அசைந்தாடின.


கோபி அருகே காசிபாளையத்தை கடந்து, பிரதான சத்தி சாலையோரத்தில் ஒரு துாக்கு மூஞ்சி மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. அதேபோல் கா.கணபதிபாளையத்தில், பிரதான சத்தி சாலையில் புளியமரத்தின் கிளை முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

Advertisement