வீடு புகுந்து திருட முயற்சி சிக்கிய போதை ஆசாமி

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியை அடுத்த வடக்கு காந்திபுரம், பஞ்சர்கடை வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 45; நேற்று முன்தினம் இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை திறந்து வைத்து விட்டு துாங்கியுள்ளார்.

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த ஆசாமி, பொருட்களை திருட முயன்றார். சத்தம் கேட்டு எழுந்த வெங்கடேஷ் மற்றும் குடும்பத்தினர் கூக்குரல் எழுப்பவே அக்கம்பக்கத்தினர் ஆசாமியை சுற்றி வளைத்து பிடித்தனர். போதையில் இருந்தவரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மதுரை, சுப்ரமணியபுரத்தை சேர்ந்த திவாகரன், 28, என்பது தெரிந்தது. புன்செய்புளியம்பட்டியில் தங்கி நுாற்பாலையில் வேலை செய்து வருவதும் தெரிந்தது. திவாகரனை கைது செய்தனர்.

Advertisement