பைக் களவாடிய 4 பேருக்கு காப்பு

கோபி:கோபி அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 30; சலுான் கடை உரிமையாளர்; வீட்டு முன் நிறுத்தியிருந்த இவரது ஹோண்டா டிரீம் பைக்கை, நேற்று முன்தினம் திருட்டு போனது.

மணிகண்டன் புகாரின்படி கோபி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் பாரியூர் சாலையில் பைக்குடன் நின்ற நால்வரை போலீசார் நேற்று மடக்கினர். விசாரணையில் திருப்பூரை சேர்ந்த அஜித், 25, தாமஸ்குட்டி, 20, பிரித்விராஜ், 22, சதீஸ்குமார், 20, என்பது தெரிய வந்தது. நான்கு பேரையும் கைது செய்தனர்.

Advertisement