மெக்கானிக் தற்கொலை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த நேரு நகரை சேர்ந்தவர் ஸ்டாலின், 54; மெக்கானிக். ஆறு மாதம் முன் சாலை விபத்தில் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார். வலி அதிகரித்ததால் மது குடித்துள்ளார்.


நேற்று முன்தினம் வலி அதிகரிக்கவே, மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து விட்டார். குடும்பத்தினர் மீட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இறந்தார். ஸ்டாலினுக்கு பார்வதி என்ற மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.

Advertisement