மாவட்ட கிரிக்கெட்: எவர் கிரீன், ஸ்மாஷர்ஸ் அணிகள் வெற்றி

தேனி : தேனி மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. தேனியில் நடந்த போட்டியில் யூத் ஸ்போர்ட்ஸ் அணி, எவர் கிரீன் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த யூத் ஸ்போர்ட்ஸ் அணி 20.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து, 64 ரன்கள் எடுத்தது. எதிரணி வீரர் விநாயக் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சேசிங் செய்த எவர் கிரீன் அணி 8.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் ஸ்மாஷர்ஸ் அணி, காஸ்மோ சி.சி., அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த காஸ்மோ சி.சி. அணி 40 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. ஷ்மாஷர்ஸ் அணி வீரர் சந்தோஷ்குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து பேட்டிங் செய்த ஷ்மாஷர்ஸ் அணி 39.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது.

Advertisement