பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்

புதுடில்லி : பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லிமென்ட் வளாகத்தில் 6வது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 21ல் துவங்கியது. லோக்சபா, ராஜ்யசபாவில் முதல் நாளே அமளியில் குதித்த காங்., - தி.மு.க., - திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'பஹல்காம் தாக்குதல், 'ஆபரேஷன் சிந்துார்' குறித்து விவாதம் நடத்த வேண்டும், பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது' என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், இரு சபைகளிலும் அலுவல்கள் முடங்கின.
'ஆபரேஷன் சிந்துார் உட்பட அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயார்' என, பலமுறை தெரிவித்தும் கூட அமளியில் ஈடு படுவதை எதிர்க்கட்சிகள் விடவில்லை. கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து, இரு சபைகளிலும் இதுவரை எந்த அலுவல்களும் நடக்கவில்லை. எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால், பார்லி., முடங்கி உள்ளது.
இதனிடையே, கடந்த சனிக்கிழமை நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பார்லிமென்டை சுமூகமாக நடத்த ஒப்புக் கொண்டன. இதனால், இன்று இரு அவைகளிலும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், பார்லிமென்ட் வளாகத்தில் 6வது நாளாக இன்று எதிர்க்கட்சிகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பதாகைகளை ஏந்தியவாறு, பீஹார் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால், பார்லியில் பரபரப்பு நிலவி வருகிறது.



மேலும்
-
உலகக்கோப்பை செஸ் தொடர்:19 வயது திவ்யா தேஷ்முக் சாம்பியன்
-
முடிவுக்கு வந்தது எல்லை மோதல்; தாய்லாந்து- கம்போடியா போர் நிறுத்தம் அமல்
-
அசாமில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
-
உலக கோப்பை செஸ்: திவ்யா சாம்பியன்
-
பஹல்காமில் பயங்கரவாதிகள் அத்துமீறியது எப்படி: பார்லி விவாதத்தில் காங்கிரஸ் கேள்வி
-
கேரளா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து; பயணிகள் 30 பேர் கதி என்ன? மீட்கும் பணி தீவிரம்