தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

தேனி : ''மாவட்டத்தில் கத்தரி, தக்காளி, வாழை பயிர் காப்பீடு செய்வதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.'' என, தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது: அதிக மழை பொழிவு, மழை குறைவு உள்ளிட்ட ஏதேனும் பருவநிலை மாறுபாடு, புயல், நிலச்சரிவு உள்ளிட்ட வற்றால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகள் இழப்பீடு பெற முடியும். அதனால் பயிர்களுக்கு காப்பீடு செய்வது கொள்வது நல்லது. கத்தரிக்கு பிரிமியம் தொகை ரூ.1110.88, காப்பீட்டுத் தொகை ரூ. 26,200 ஆகும். அதே போல் தக்காளிக்கு பிரிமியம் தொகை ரூ.1582.51, காப்பீட்டுத் தொகை ரூ. 31,650.20 ஆகும். வெங்காயத்திற்கு பிரிமியம் ரூ.2267.51, காப்பீட்டுத் தொகை ரூ. 45,350.20 ஆகும். இப்பயிர்களுக்கு செப்.1க்குள் காப்பீடு செய்ய வேண்டும். வாழைக்கு பிரிமியம் ரூ.4997.50, காப்பீட்டுத் தொகை ரூ. 99,950.20 ஆகும், கடைசி நாள் செப்.16 ஆகும்.

பிரிமியம் தொகை, சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்துடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement