குமுளி மலைப் பாதையில் பாலிதீன் கழிவுகள் அகற்றம்

கூடலுார் : குமுளி மலைப் பாதையில் பயணிகளால் வீசி செல்லப்பட்ட பாலிதீன் கழிவுகள் அகற்றப்பட்டது.

லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., துார மலைப் பாதையில் வாகனங்களில் செல்லும் பயணிகள் பாலிதீன், மது பாட்டில்களை வீசிவிட்டு செல்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் கூடலுார் வனத்துறை, கார்டன் சிட்டி ரோட்டரி சங்கம், என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி இணைந்து அகற்றும் பணியை மேற்கொண்டது. தலைமை ஆசிரியர் வெங்கட்குமார் தலைமையில், ரேஞ்சர் பிரபாகரன் துவக்கி வைத்தார். குவியல் குவியலான பாலிதீன் கழிவுகள், நுாற்றுக்கணக்கான மது பாட்டில்களை அகற்றினர். என்.எஸ்.கே.பி.பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள், வனத்துறையினர், ரோட்டரி சங்கத்தினர் இப்பணியில் ஈடுபட்டனர்.

மண்டல ஒருங்கிணைப்பாளர் குமார், துணை ஆளுநர் சுரேஷ் கண்ணன், தலைவர் பூர்ணிமா, செயலாளர் பூபேஷ் கண்ணன், பொருளாளர் சந்தோஷ்குமார், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சென்றாய பெருமாள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Advertisement