ஓய்வறியா பயணம்... தேச நலனே பிரதானம்

7

பிரதமர் மோடி 2014ல் இருந்து தற்போது வரை 91 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதில் 78 நாடுகளுக்கு சென்றுள்ளார். இதன்மூலம் வெளிநாட்டு முதலீகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தார். மேலும் வெளியுறவுக்கொள்கைளை வலுப்படுத்தியுள்ளார்.


இதில் ஒரே பயணத்தில் எட்டு நாடுகளுக்கு கூட சென்றுள்ளார். ஒவ்வொரு நாடும் வெவ்வேறு காலநிலை, நேரத்தை கொண்டது. இருப்பினும் ஓய்வே இல்லாமல் தேச நலனை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி அசராமல் பணியாற்றி வருகிறார். சில வெளிநாட்டு பயணத்தில் இருந்து நாடு திரும்பிய உடனேயே உள்நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றார். 2022 டிச.30ல் தாய் ஹீராபென் மறைந்த போது கூட, இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு, உடனே பணிக்கு திரும்பி 'வந்தே பாரத்' ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.


கடந்த ஏப்ரலில் தாய்லாந்து பயணத்தை முடித்து இலங்கை சென்றார். பின் அங்கிருந்து நேராக ராமேஸ்வரம் வந்து, நாட்டின் முதல் செங்குத்து ரயில் துாக்குப்பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சமீபத்தில் கூட பிரிட்டன் சென்ற பிரதமர் மோடி, பின் மாலத்தீவு சென்றார்.


அங்கிருந்து துாத்துக்குடிக்கு வந்து புதிய விமான நிலைய முனையம் திறப்பு உள்ளிட்ட திட்டங்களை துவக்கிய பின் இரவு திருச்சி வந்தார். மறுநாள் (நேற்று) கங்கை கொண்ட சோழபுரம் நிகழ்ச்சியில் பங்கேற்று மாலையில் டில்லி திரும்பினார். இன்று பார்லிமென்டில் நடைபெறும் 'ஆப்பரேஷன் சிந்துார்' விவாதங்களில் பங்கேற்கிறார்.

Advertisement