முதல்வர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் : 'முதல்வர் மாநில விளையாட்டு விருதுக்கு' விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் 2024-25, 2025-26 ஆண்டுகளுக்கான முதல்வர் மாநில விளையாட்டு விருது வழங்கப்படவுள்ளது. பன்னாட்டு, தேசிய அளவில் சிறந்த வீரர்கள், பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பிரிவில் தலா 2 பேருக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், தங்கப் பதக்கம், பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும்.

விளையாட்டு போட்டிகளை நடத்தும் நிர்வாகி, ஆதரவளிக்கும் நிறுவனம், நன்கொடையாளருக்கு தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.

தகுதியுடைய விளையாட்டு வீரர்கள் மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், முதன்மை உடற்கல்வி ஆய்வர் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை http://www.sdat.tn.gov.in என்ற இணையதளத்திலும், ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தலைமை அலுவலகத்திற்கு ஆக.11க்குள் அனுப்ப வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

Advertisement