பஸ்சிலிருந்து  தவறி விழுந்த பெண் பலி

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் கேணிக்கரையில் தனியார் பஸ்சில் பயணித்த பெண் தவறி விழுந்ததில் பலியானார்.

நயினார்கோவிலை அடுத்த தேர்த்தங்கல் இல்லிமுள்ளி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி காளியம்மாள் 56. இவர் தனது மருமகள் தாரணியுடன் காரைக்குடியிலிருந்து ராமநாதபுரத்திற்கு தனியார் பஸ்சில் வந்தார். கேணிக்கரை பகுதிக்கு வந்தவுடன் பஸ் கண்டக்டர் பிரபாகரன் கேணிக்கரை வந்து விட்டதாக காளியம்மாளிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காளியம்மாள் பஸ்சின் படிப்பகுதியில் வந்தவர் பஸ் ஓடிக்கொண்டிருக்கும் போதே தவறி விழுந்து காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். கேணிக்கரை போலீசார் தனியார் பஸ் டிரைவர் மானாமதுரை ஜியோ நகர் மணி மகன் செந்தில்முருகன் 39, பிடித்து விசாரிக்கின்றனர்.

Advertisement