திருப்புவனத்தில் ஒன்றரை ஆண்டில் பாலம் உடைந்தது

திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலத்தை 2023ல் 75 லட்ச ரூபாய் செலவில் பலப்படுத்தியும் ஒன்றரை ஆண்டில் உடைந்தது.

திருப்புவனத்தில் இருந்து பூவந்தி, மடப்புரம், சிவகங்கைக்கு வைகை ஆற்றை கடந்து தான் செல்ல முடியும்.

வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் 1995ல் வெள்ளத்தின் போது சேதமடைந்ததை தொடர்ந்து ஆறு கோடியே 21 லட்ச ரூபாய் செலவில் உயர்மட்ட மேம்பாலம் 1998ல் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இன்று வரை வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது.

திருப்புவனம், சிவகங்கை வழியாக தொண்டி வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டதை தொடர்ந்து பாலத்தை உறுதிப்படுத்தும் பணி 2021 - 22ல் 75 லட்ச ரூபாய் செலவில் நடந்தது.

பொதுப்பணித்துறை மேற்பார்வையின் கீழ் பாலத்தின் கீழே உள்ள 16 துாண்களின் இருபுறமும் சிமென்ட் சுவர், துாண்களைச் சுற்றி தளம் அமைக்கப்பட்டு வைகை ஆற்றில் நீர் திறப்பின் போது எளிதாக செல்ல நடவடிக்கை எடுக்கப் பட்டது.

ஆனால் பணி முடிந்த ஒன்றரை ஆண்டுகளிலேயே பல இடங்களில் சிமென்ட் தளம் பெயர்ந்து விட்டது.

Advertisement