பால் உற்பத்தி குறைவால் நிலவும் தட்டுப்பாடு; ஆவினுக்கு அனுப்புவதை நிறுத்த முடிவு

திருப்பவுனம், : திருப்புவனத்தில் கடந்த சில நாட்களாக பாலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்புவதை நிறுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் மடப்புரம்,மணல்மேடு, பெத்தானேந்தல், அல்லிநகரம், லாடனேந்தல், மழவராயனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கறவை மாடு வைத்திருப்பவர்களிடம் பால் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளுர் தேவை போக மீதியுள்ள பால் காரைக்குடி ஆவினுக்கு அனுப்பி வருகின்றனர். திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இருவேளையும் சேர்த்து 8,500 லிட்டர் பால் கொள்முதல் செய்து, 4,000 லிட்டர் பால் உள்ளுர் தேவைக்கும் மீதியுள்ள பால் காரைக்குடி ஆவினுக்கும் அனுப்படுகிறது. திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேய்ச்சல் நிலம் குறைந்ததாலும், போதிய அளவு மழை இல்லாததாலும் பால் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. தினசரி 8,500 லிட்டர் கிடைத்த இடத்தில் தற்போது 6,000 லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. காரைக்குடி ஆவினுக்கு 4,500 லிட்டர் அனுப்பியது போக மீதியுள்ள பால் உள்ளுரில் விற்பனை செய்யப்படுகிறது. பாலின் அளவு குறைந்ததால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு பதிலாக 500 மி.லி., பால் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
* புற்களின்றி உற்பத்தி குறைவு:
இது குறித்து கறவை மாடு வளர்ப்போர் கூறியதாவது, இரு மாதங்களாக மழையே இல்லை. இதனால் மேய்ச்சல் நிலங்களில் புற்கள் குறைந்து விட்டது. மாடு மேய்ச்சலுக்கு போயிட்டு வந்தால் தான் உற்பத்தி அதிகரிக்கும். தீவனம் எவ்வளவுதான் வழங்கினாலும் பால் உற்பத்தி குறையும். இனி செப்., ல் மழை பெய்தால் மட்டுமே புற்கள் முளைக்கும், மேய்ச்சலுக்கும் அழைத்துச் செல்ல முடியும், என்றனர்.
* ஆவினுக்கு வழங்க எதிர்ப்பு:
இது குறித்து மக்கள் கூறியதாவது, கைக்குழந்தைகளுக்கு பாக்கெட் பால் கொடுப்பத்தில்லை. உள்ளுரில் தட்டுப்பாடு உள்ள நிலையில் ஆவினுக்கு அதே அளவு ஏன் அனுப்ப வேண்டும். உள்ளுர் தேவை போகத்தான் மீதியை ஆவினுக்கு, அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
///
மேலும்
-
பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்
-
காந்தி, பாரதியார்,மோடியை சுமப்பதில் பெருமை ; கேரள மீனவர் புதுமை
-
போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டம்; இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து
-
ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் பாதுகாவலர்களாக மாறும் காங்கிரஸ்; பாஜ விமர்சனம்
-
உ.பி.,யில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்
-
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்