சோழந்துார் ஊருணி படித்துறை சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துாரில் உள்ள ஊருணியில் பராமரிப்பின்றி படித்துரையில் படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

தேசிய நெடுஞ்சாலை, ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துார் அமைந்துள்ளது. அப்பகுதி கிராமத்தினர் பயனடையும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான ஊருணி உள்ளது. இந்த ஊருணி நீரை பொதுமக்கள் குளிப்பது மற்றும் துணி துவைப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஊருணி படித்துறை முறையாக பராமரிப்பு இல்லாததன் காரணமாக, படிக்கட்டுகள் சேதம் அடைந்துள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஊருணியில் உள்ள படிக்கட்டுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement