ஆடி பிரமோற்ஸவ விழா தேரோட்டம்  

சிவகங்கை : காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் சமேத சொர்ணவல்லி அம்பாள் கோயிலில் ஆடிப்பூர பிரமோற்ஸவ விழா தேரோட்டம் நேற்று நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஜூலை 19 அன்று கொடியேற்றத்துடன் ஆடி பிரமோற்ஸவ விழா துவங்கியது. திரு விழாவை முன்னிட்டு சொர்ணவல்லி அம்பாளுக்கு தினமும் இரவு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. விழாவின் 9 ம் நாளான நேற்று காலை 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சொர்ணவல்லி அம்பாள் எழுந்தருளினார்.

தேரில் எழுந்தருளிய அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து, காலை 10:45 மணிக்கு நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்பாளை தரிசனம் செய்தனர்.

ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று காலை யாகசாலை, கும்பம், அபிேஷகம் நடைபெறும். ஆடிப்பூர உற்ஸவம் நடைபெறும். ஜூலை 30 ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 12:00 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும். தேவஸ்தான கண்காணிப்பாளர் பாலசரவணன், கோயில் ஸ்தானிகர் ரத்தின காளீஸ்வர குருக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement