'மஹாராணி கோப்பை டி -  20'  ஆக., 4ல் போட்டி துவக்கம்

பெங்களூரு : 'மஹாராணி கோப்பை' டி - 20 லீக் போட்டி அடுத்த மாதம் 4ம் தேதி துவங்க உள்ளது.

கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் வெளியிட்ட அறிக்கை:

கர்நாடகாவில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தும் விதமாக 'மஹாராணி கோப்பை' டி - 20 லீக் போட்டி அறிமுகப் படுத்தப்படுகிறது. ஆகஸ்ட் 4ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை, ஏழு நாட்கள் நடக்கும். ஒவ்வொரு நாளும் இரண்டு போட்டிகள் நடக்கும்.

இப்போட்டிகள், நாகசந்திரா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும். இறுதி போட்டி, சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும். மைசூரு வாரியர்ஸ், ஹூப்பள்ளி டைகர்ஸ், ஷிவமொக்கா லயன்ஸ், மங்களூரு டிராகன்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்கும். இந்த அணியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான ஏலம், நாளை நடக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement