எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியால் முடங்கியது பார்லிமென்ட்: லோக்சபா, ராஜ்யசபா ஒத்திவைப்பு

புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், லோக்சபா, மதியம் 1 மணி வரையும், ராஜ்யசபா மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டன.
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ல் துவங்கியது. ஆப்பரேஷன் சிந்துார், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம், அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்தம், பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருதால், பார்லிமென்ட் தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 28) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியது. ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடக்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால், கூச்சல், குழப்பம் நிலவியது. லோக்சபாவை மதியம் 1 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
ராஜ்யசபா காலை 11 மணிக்கு கூடியது. அவை கூடியதும், புதியதாக தேர்வான அதிமுகவை சேர்ந்த தனபால், இன்பதுரை ஆகியோர் எம்.பி.,யாக பதவியேற்றனர். அவர்களுக்கு அவை தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், ராஜ்யசபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.











மேலும்
-
நான் ஓயப்போவதில்லை; எழுச்சிப்பயணம் தொடரும்: இபிஎஸ்
-
வக்கீல் வெட்டிக்கொலை: மர்ம கும்பல் தப்பி ஓட்டம்
-
பாக்., ஆக்கிரமித்த காஷ்மீரை மீட்டால் தான் அமைதி ஏற்படும்; ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் திரிணமுல் எம்.பி., பேச்சு
-
உலகக்கோப்பை செஸ் தொடர்:19 வயது திவ்யா தேஷ்முக் சாம்பியன்
-
முடிவுக்கு வந்தது எல்லை மோதல்; தாய்லாந்து- கம்போடியா போர் நிறுத்தம் அமல்
-
அசாமில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது