மரம் விழுந்து கடைகள் சேதம்

பழநி : பழநி கொடைக்கானல் ரோடு கிரி வீதி இணைப்பு சாலை பகுதியில் பலத்த காற்று வீசியதால் மரம் விழுந்து சாலையோர கடைகள் சேதமடைந்தது.
பழநி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று கிரி வீதி, சிவகிரி பட்டி பைபாஸ் ரோடு, கொடைக்கானல் ரோடு இணைப்பு சாலை பகுதியில் மரம் காற்றில் சரிந்தது. அப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் கடை அமைத்திருந்தனர் அதில் 3 கடைகள் மீது மரம் விழுந்தது. அப்போது கடைகள் திறக்கப்படாமல் இருந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. நெடுஞ்சாலை துறையினர் மரத்தை அகற்றி சரி செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் எப்போது; பியூஷ் கோயல் தகவல்
-
காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
-
ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு விபத்து; 3 பேர் பலி; 34 பேர் படுகாயம்!
-
ந.வைரவன்பட்டியில் இன்று தேரோட்டம்
-
சமுதாயக்கூடமின்றி கிராமத்தினர் அவதி
-
மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை லால்பாக் பூங்காவில் திறப்பு
Advertisement
Advertisement