காரையூரில் மாட்டு வண்டி பந்தயம்

திருப்புத்தூர் திருப்புத்தூர் அருகே காரையூரில் ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில், 56 ஜோடிகள் பங்கேற்றன.

இப்போட்டி திருப்புத்துார் --- சிங்கம்புணரி ரோட்டில் நடந்தது. பெரிய மாடு பிரிவில் பங்கேற்ற 14 மாட்டு வண்டிகளில் அவனியாபுரம் மோகன், கே.புதுப்பட்டி அம்பாள், ரணசிங்க புரம் விக்ரம் வினோத் ஆகியோரின் வண்டிகள் வெற்றி பெற்றன.

சின்ன மாட்டு வண்டிபிரிவில் 42 ஜோடிகள் பங்கேற்றதில், குண்டேந்தல்பட்டி சுப்பு, பொட்டி பெரும்புதூர் பாண்டி ஆகியோரின் மாடுகள் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

Advertisement