காரைக்குடியில் முட்புதர்கள் சூழ்ந்துள்ள இரட்டை குளம்

காரைக்குடி : காரைக்குடி கழனி வாசலில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த இரட்டைக் குளம் ஊருணி பராமரிப்பின்றி கருவேல மரங்கள் சூழ்ந்து கிடக்கிறது.

காரைக்குடி மாநகராட்சியில் உள்ள கழனிவாசலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள இரட்டை குளம் முனீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் சிறப்பாக நடைபெறும்.

அப்பகுதி மக்களின் குடிநீர் உட்பட பல்வேறு தேவைகளை இரட்டைக் குளம் பூர்த்தி செய்து வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குளம் பராமரிப்பின்றி கிடக்கிறது.

உலக்கைச் சுற்றிலும் வேலி அமைத்து நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் குளத்திற்கு வரக்கூடிய வரத்து கால்வாய்கள் மாயமானதோடு குளமும் பராமரிப்பின்றி கருவேல மரங்கள் சூழ்ந்து கிடக்கிறது. பாரம்பரிய ஊருணியை பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement