காங்., சொத்து பாதுகாப்பு குழு ஆய்வு
திருப்புத்தூர் : திரு்ப்புத்தூரில் தமிழ்நாடு காங். சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழுவினர் கட்சி அலுவலகமான காந்தி மாளிகையை ஆய்வு செய்தனர்.
இக்குழுவினர் தமிழகத்தில் உள்ள காங்.,கட்சியின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது மூன்றாம் கட்டப் பயணத்தில் இக்குழுவின் தலைவர் தங்கபாலு, இணை தலைவர் கிருஷ்ணசாமி, இணை செயலாளர் நிதின் கும்பல்கர், ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பு, பொதுச்செயலாளர் செல்வம் ஆகியோர் வருகை தந்தனர்.
திருப்புத்தூருக்கு 1930 களில் காந்தி வருகையை அடுத்து இங்கு தானமாக வழங்கப்பட்ட இந்த இடத்தை கட்சி நிர்வாகிகள் பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்ததற்கு குழுவினர் பாராட்டுத் தெரிவித்தனர்.
காங்., கார்த்தி எம்.பி., மாவட்ட தலைவர் சஞ்சய், துணை தலைவர் கணேசன், வட்டார தலைவர்கள் பன்னீர்செல்வம், பிரசாந்த், நகர் தலைவர் சீனிவாசன், பொதுக்குழு வசீகரன், இளைஞர் காங்., தலைவர் கார்த்திகை ராஜா பங்கேற்றனர்.
மேலும்
-
காப்புரிமை விவகாரம்; இசையமைப்பாளர் இளையராஜா மனு தள்ளுபடி
-
நெல்லையை உலுக்கிய ஐ.டி., ஊழியர் ஆணவக் கொலை: எஸ்.ஐ., தம்பதிக்கு வலை
-
அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவம்; தானாக முன்வந்து விசாரிக்கும் உச்சநீதிமன்றம்
-
திட்டங்களுக்கு தந்தையின் பெயரை வைக்க முனைப்பு காட்டும் முதல்வர்; அண்ணாமலை விமர்சனம்
-
இனியாவது திருந்த வேண்டும் இந்த திராவிட மாடல் அரசு; எச்சரிக்கும் அன்புமணி
-
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியால் முடங்கியது பார்லிமென்ட்: லோக்சபா, ராஜ்யசபா ஒத்திவைப்பு