சூரிய சக்தி பம்பு செட் மானியம்: 72 பேருக்கு வழங்கல்
கரூர்: நான்கு ஆண்டுகளில், முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம் மூலம், 72 விவசாயிக-ளுக்கு, 1.39 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்-டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே, லாலாபேட்டையில் வேளாண் பொறியியல் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள சூரிய சக்தி பம்பு செட்டுகளின் செயல்பாட்டை கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: முதல்வர் சூரிய சக்தி பம்பு செட் திட்டம் மூலம், மொத்த விலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி-யினர் பிரிவை சேர்ந்த சிறு, குறு விவசாயிக-ளுக்கு, 80 சதவீதமும், பொது பிரிவை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த இதர விவசாயிகளுக்கு, 70 சதவீதமும், இதர விவசா-யிகளுக்கு, 60 சதவீதமும் மானியம் வழங்கப்படு-கிறது. அதன்படி, கரூர் மாவட்டத்தில், நான்கு ஆண்டுகளில் முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம் மூலம், 72 விவசாயிகளுக்கு, 1.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மானியம் வழங்-கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் இயந்திரமய-மாக்குதலுக்கான துணை இயக்க திட்டத்தின் மூலம் பல்வேறு வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் வாங்குவதற்கும், வேளாண் இயந்-திர வாடகை மையங்களை அமைப்பதற்கும் மானியமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர் கலைச்செல்வி, உதவி இயக்-குனர்(ஊராட்சிகள்) சரவணன் உள்பட பலர் பங்-கேற்றனர்.
மேலும்
-
பீஹாரில் குட்ட பாபு என பெயரிட்டு நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வினியோகம்: விசாரணைக்கு உத்தரவு
-
வரலாற்றுச் சாதனை படைத்த ஆபரேஷன் சிந்துார்: லோக்சபாவில் ராஜ்நாத் சிங் பேச்சு
-
வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு ஆதார் அட்டையை நிராகரிக்க கூடாது; சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ஆபரேஷன் சிந்தூர் பற்றி எதிர்க்கட்சிகள் விவாதம்; காங்., சார்பில் பங்கேற்க சசிதரூர் மறுப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி!
-
30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்?