வரலாற்றுச் சாதனை படைத்த ஆபரேஷன் சிந்துார்: லோக்சபாவில் ராஜ்நாத் சிங் பேச்சு

7

புதுடில்லி: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை மூலம் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்தது என்று லோக்சபாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்ஹாமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பின்புலத்தில் பாகிஸ்தான் செயல்பட்ட நிலையில், இந்தியா, ஆபரேஷன் சிந்துார் என்ற நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது.

இது தொடர்பான விவாதத்தை லோக்சபாவில் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தாக்குதலின் போது 9 பயங்கரவாத நிலைகள் மீது குறிவைக்கப்பட்டன என்றார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:


நமது படைகளால் நடத்தப்பட்ட நன்கு ஒருங்கிணைந்த தாக்குதல்கள், 9 பயங்கரவாத உள்கட்டமைப்பு இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கின. நான் எச்சரிக்கையுடன் பேசுகிறேன், எனவே நமது புள்ளிவிவரங்கள் தவறாக இல்லை. உண்மையான எண்ணிக்கை மிக அதிகம். 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், அவர்கள் அனைவரும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர்.

இவை பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐயிடமிருந்து வெளிப்படையான ஆதரவைப் பெறும் பயங்கரவாத அமைப்புகள்.

இந்தியா தனது அனைத்து அரசியல் மற்றும் ராணுவ நோக்கங்களையும் அடைந்தது. பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் நடத்தி, ராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இந்தியா அமைதியை விரும்புகிறது. இந்திய படைகளின் பலத்தை சர்வதேச நாடுகள் புரிந்துகொண்டன. ஆபரேஷன் சிந்துார் மூலம் இந்தியா வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் நிறைவேறியது. பாகிஸ்தான் முதலில் போர் நிறுத்தம் செய்யக் கோரியது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் பாகிஸ்தானால் தாக்க முடியவில்லை.


இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


@quote@எதிர்கட்சிகளின் கூச்சலுக்கிடையே ஆபரேஷன் சிந்துார் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்: பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களுக்கு நவீன வான் பாதுகாப்பு மூலம் பதிலடி தந்தோம். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பதிலடி, தற்காப்பு நடவடிக்கைதான். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, தேவைப்பட்டால் மீண்டும் தொடங்கப்படும் என்றார் ராஜ்நாத் சிங்.quote

Advertisement