வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு ஆதார் அட்டையை நிராகரிக்க கூடாது; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

26


புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று (ஜூலை 28) நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை செல்லுபடியாகும் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள தயங்குவது குறித்து, இந்திய தேர்தல் கமிஷனிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர்.

தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:



* எந்த ஆவணத்தையும் போலியாக உருவாக்க முடியும். வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.



* வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை நிராகரிக்க கூடாது.


* ஆவணங்களில் எதுவும் பிரச்னை இருந்தால் தனிநபருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கலாம்.


* ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் ஏன் முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதை தேர்தல் கமிஷன் தெளிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement