மாயனுார் காவிரி ஆற்றில் கூடுதல் நீர்வரத்து: மக்களுக்கு எச்சரிக்கை
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணைக்கு, மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரிநீர், கதவணை ஷட்டர் வழியாக டெல்டா பாசனத்திற்கு திறக்-கப்படுகிறது. தற்போது, காவிரி நீர்பிடிப்பு பகுதி-களில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு கூடுதல் தண்ணீர் வருகிறது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான, 120 அடியை எட்டியுள்ளதால், அணையில் இருந்து நீர்வரத்து முழுவதும் காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்படுகிறது.
இதனால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்-வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர், உடைமைகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கு-மாறும், நீர்வளத்துறை நிர்வாகம் சார்பில் கேட்-டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மாயனுார் காவிரி ஆற்றில் அதிகமான தண்ணீர் வரத்து காரணமாக, கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, கிருஷ்-ணராயபுரம் ஆகிய பஞ்.,களில் வசிக்கும் மக்க-ளுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வு விடப்பட்டுள்-ளது.
மேலும்
-
வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு ஆதார் அட்டையை நிராகரிக்க கூடாது; சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ஆபரேஷன் சிந்தூர் பற்றி எதிர்க்கட்சிகள் விவாதம்; காங்., சார்பில் பங்கேற்க சசிதரூர் மறுப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி!
-
30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்?
-
பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள்; எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல்
-
தாய்லாந்து மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் சுட்டுக்கொலை