கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் அரசு பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை


கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்குட்-பட்ட பஸ் ஸ்டாப் பகுதிகளில், கோவை மண்டல அரசு போக்குவரத்து பஸ்கள் நிறுத்தாமல் செல்-வதால், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்குட்-பட்ட மாயனுார், கிருஷ்ணராயபுரம், மகாதான-புரம், குளித்தலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட லாலாப்பேட்டை ஆகிய பகுதிகளில், பஸ் ஸ்டாப் உள்ளது.


இப்பகுதி மக்கள் கரூர், திருச்சி செல்வதற்காக பஸ் ஸ்டாப் வந்து, அரசு போக்குவரத்து கழக பஸ்சில் ஏறி சென்று வருகின்றனர். இந்நி-லையில், கோவை மண்டலத்திற்குட்பட்ட அரசு போக்குவரத்து பஸ்கள் மட்டும், கோவை பகு-தியில் இருந்து திருச்சி செல்லும்போது, கரூர், திருச்சி ஆகிய ஊர் பஸ் பயணிகள் மட்டும் ஏற்றி செல்கிறது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, மகாதானபுரம், மாயனுார் பகுதி மக்களை, கோவை மண்டல பஸ் கண்டக்டர், டிரைவர்கள் ஏற்ற மறுக்கின்றனர்.
இதனால் நீண்ட நேரம் காத்திருந்து, கரூர் மண்-டல அரசு போக்குவரத்து பஸ் வந்து, அதன்பின், ஏறி வர வேண்டியுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, பயணிகள் நலன் கருதி, அனைத்து மண்டல அரசு போக்குவரத்து கழக பஸ்களும், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, மாயனுார், மகாதானபுரம் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி பயணி-களை ஏற்றி, இறக்க செல்ல வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement