ராயனுார் சாலையில் 'இருட்டு' கூடுதல் மின்விளக்கு தேவை
கரூர்: -கரூர், ராயனுார் சாலையில் இரவில் இருள்-சூழ்ந்து காணப்படுவதால், கூடுதல் மின்விளக்-குகள் அமைத்து தரவேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரூர், ராயனுார் சாலையில் திண்டுக்கல், ஈச-நத்தம், பாகநத்தம், பைபாஸ் சாலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பயணித்து வருகின்றன. இப்பகு தியில் அதிகளவு குடியிருப்-புகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளன.
ஆனால், பிரதான சாலையில் குறிப்பிட்ட துாரம் வரை மின் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் இருட்டாகவே காணப்படுகிறது. இவ்வழியில் வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்-களும் அவ்வப்போது நடந்து வருகிறது. குறிப்பாக நடந்து செல்வோர் மற்றும் வயதானோர் பரித-வித்து வருகின்றனர். போதிய வெளிச்சம் குறைவு காரணமாக இரவு நேரங்களில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் மோதி விபத்து நடக்-கிறது.
இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கும் வகையில் கூடுதல் மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு ஆதார் அட்டையை நிராகரிக்க கூடாது; சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ஆபரேஷன் சிந்தூர் பற்றி எதிர்க்கட்சிகள் விவாதம்; காங்., சார்பில் பங்கேற்க சசிதரூர் மறுப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி!
-
30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்?
-
பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள்; எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல்
-
தாய்லாந்து மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் சுட்டுக்கொலை