உலக கோப்பை செஸ்: திவ்யா சாம்பியன்

பதுமி: உலக கோப்பை செஸ் தொடரில் கோப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆனார் திவ்யா. பைனலில் சக வீராங்கனை ஹம்பியை வீழ்த்தினார்.

ஜார்ஜியாவில் பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் நடந்தது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்றனர். 'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் பைனலுக்கு ஹம்பி 38, திவ்யா 19, என இரு இந்திய வீராங்கனைகள் முன்னேறி, புதிய வரலாறு படைத்தனர். தவிர, உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ், 2026) பங்கேற்கும் வாய்ப்பு பெற்றனர்.
பைனலில் இரு போட்டிகள் நடந்தன. இரண்டும் 'டிரா' ஆக, ஸ்கோர் 1.0-1.0 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய இன்று 'டை பிரேக்கர்' நடந்தது. இதில் அசத்திய திவ்யா 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பெண்கள் உலக கோப்பை தொடரில் சாம்பியன் ஆனா முதல் இந்திய வீராங்கனை ஆனார்.

Advertisement