நல்லா படிச்சவரு டாக்டர்; சரியாக படிக்காத நான் துணை முதல்வர்; உதயநிதி வெளிப்படை!

சென்னை: ''என் தாய் மாமா நல்லா படிச்சு டாக்டர் ஆகிட்டாரு;
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 2025ம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கி துணை முதல்வர் உதயநிதி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: இந்த விழாவில் பங்கேற்று உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி. முதலில் கவுன்சிலின் தலைவர் மருத்துவர் ராஜமூர்த்திக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கவுன்சிலை பொறுத்த வரை அவர் உங்களுக்கு தலைவராக இருக்கிறார். பலருக்கு தெரியும். ஆனால் சில பேருக்கு தெரியாது. எனக்கு அவர் சொந்த தாய் மாமா. என்னை தூக்கி வளர்த்தவர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கோபாலபுரம் வீட்டில் நானும் அவரும் ரூம் மேட்ஸ். இருவரும் சேர்ந்து ஒன்றாகத்தான் படித்தோம்.
சரியாக படிக்காமல்...!
அவர் நல்லா படித்து டாக்டர் ஆகிவிட்டார். சரியாக படிக்காமல் நான் துணை முதல்வர் ஆகிவிட்டேன். இந்த நிலைமைக்கு நான் இங்கே நிற்பதற்கு காரணம் ராஜமூர்த்தி தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அழைத்ததற்கு தாய் மாமா ராஜமூர்த்திக்கும் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பூரிப்படைகிறேன்!
இங்கு வந்துள்ள ஒவ்வொரு செவிலியரின் முகத்தை பார்க்கும்போதும் மிகப்பெரிய அளவில் தன்னம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வு ஏற்படுகிறது. உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் முகத்தை பார்ப்பதற்கு முன்பே செவிலியர்கள் முகத்தைத்தான் பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைகிறேன். இவ்வாறு உதயநிதி பேசினார்.










மேலும்
-
இன்றும் நாளையும் மழை பெய்யும்
-
வங்கிகளில் கோரப்படாத வைப்புத்தொகை ரூ.67,003 கோடி
-
நிபந்தனையற்ற சண்டை நிறுத்தம்: தாய்லாந்து - கம்போடியா ஒப்புதல்
-
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது; உயர்நீதிமன்றத்தில் வாதம்
-
பிரிட்டன் ராணுவத்தில் சீக்கிய படைப்பிரிவு
-
முதல் அணுமின் நிலையத்திற்கு இலங்கையில் 5 இடங்கள் தேர்வு