மணிப்பூரில் ராணுவ சோதனையில் சிக்கிய ஆயுத குவியல்: 155 துப்பாக்கிகள், 1650 குண்டுகள் கண்டெடுப்பு

இம்பால்; மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் சோதனையில் 155 துப்பாக்கிகள், 1650 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி விவரம் வருமாறு;
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு, பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த சில நாட்களாக கேங்க்போக்பி, சந்தேல், பேர்ஸ்வால் உள்ளிட்ட மலைப்பிரதேச மாவட்டங்களில் தொடர் தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். இந்த பகுதிகளில் குக்கி இன மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.
மணிப்பூர் போலீஸ், அசாம் ரைபிள்ஸ், ராணுவத்தினர் கூட்டாக இந்த தேடுதல் வேட்டையில் இறங்கினர். அதில் 155 துப்பாக்கிகள், 1650 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் ஏகே ரக துப்பாக்கிகள், நாட்டுத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகளும் அடங்கும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீனாவில் கனமழைக்கு இதுவரை 34 பேர் பலி; 80,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
-
அமைச்சர் மீதான முறைகேடு வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாம்; சுப்ரீம் கோர்ட் யோசனை
-
'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம்
-
வீட்டு மனைப்பட்டா கிராம மக்கள் மனு
-
உவர் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி
-
தி.மு.க., இளைஞரணி கூட்டம் அமைச்சர் கணேசன் அழைப்பு
Advertisement
Advertisement