அசாமில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் ரூ. 6 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் சிக்கின. இந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.



அசாம் மாநிலத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் இறங்கும் போலீசார். எல்லை பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


அந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது ரூ.6 கோடி மதிப்புள்ள போதை பொருள் பிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறி உள்ளார்.


அவர் மேலும் கூறி உள்ளதாவது;


கச்சார் போலீசார் கிட்டத்தட்ட 20 ஆயிரம் போதை மாத்திரைகளை கைப்பற்றி உள்ளனர். போதை ஒழிப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் சிக்கி போதை பொருளின் மதிப்பு ரூ.6 கோடி. கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


முன்னதாக சம்பல் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு, ரூ.40 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement