உலகக்கோப்பை செஸ் தொடர்:19 வயது திவ்யா தேஷ்முக் சாம்பியன்

பதுமி: ஜார்ஜியாவில் நடந்த உலகக் கோப்பை செஸ் பைனலில், சக நாட்டு வீராங்கனையான ஹம்பியை வீழ்த்தி இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜார்ஜியாவில் நடந்த பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடரில் 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்றனர். நாக் சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள், உலகத் தரவரிசையில் 18வது இடத்திலுள்ள, 19 வயது இந்திய வீராங்கனை திவ்யா மற்றும் 'நம்பர்-5' வீராங்கனை ஹம்பி, முதல் முறையாக பைனலுக்கு முன்னேறினர். அதுமட்டுமில்லாமல், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ், 2026) பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றனர்.
இருவரும் மோதிய முதல் இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்தன. டை பிரேக்கர் போட்டி இன்று நடந்தது.
இந்தப்போட்டியில், ஹம்பியை வீழ்த்தி திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார்.
வாசகர் கருத்து (4)
Thiru, Coimbatore - Coimbatore,இந்தியா
28 ஜூலை,2025 - 20:44 Report Abuse

0
0
Reply
Bvanandan - Chennai,இந்தியா
28 ஜூலை,2025 - 19:16 Report Abuse

0
0
Reply
ANNADURAI MANI - Madurai,இந்தியா
28 ஜூலை,2025 - 18:30 Report Abuse

0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
28 ஜூலை,2025 - 17:38 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மணிப்பூரில் ராணுவ சோதனையில் சிக்கிய ஆயுத குவியல்: 155 துப்பாக்கிகள், 1650 குண்டுகள் கண்டெடுப்பு
-
அழிவிற்கான ஆரம்பம் இது: நயினார் நாகேந்திரன் காட்டம்!
-
நல்லா படிச்சவரு டாக்டர்; சரியாக படிக்காத நான் துணை முதல்வர்; உதயநிதி வெளிப்படை!
-
ஆபரேஷன் சிந்துார் விவாதம்: காங்கிரஸை வெளுத்து வாங்கிய ஜெய்சங்கர்!
-
கன்னியாஸ்திரிகள் மீது புகார்: முதல்வர் கண்டனம்
-
பாம்பன் அருகே ஆட்டோ, சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து:2 பேர் பலி
Advertisement
Advertisement