நீங்கள் சொன்ன பொய்கள் எத்தனை என்பதை நாளை சொல்கிறோம்: எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா சவால்

புதுடில்லி: நீங்கள் சொன்ன பொய்கள் எவ்வளவு என்பதை நாளை நாங்கள் சொல்கிறோம் என்று எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி தந்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தின் ஒரு பகுதியாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (ஜூலை 28) விரிவாக பேசினார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் தொடர்ந்து பதிலளித்துக் கொண்டே வந்தார்.
அவரின் பேச்சின் ஊடே, எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள் சிலர் கூச்சலிட்டு இடையூறு செய்த வண்ணம் இருந்தனர். சபாநாயகர் எவ்வளவோ கேட்டும் அவர்கள் தங்களின் குறுக்கீடுகளை கைவிடவில்லை. எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை கண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா குறுக்கிட்டு பேசினார்.
அவர் கூறியதாவது;
அவர்களுக்கு (எதிர்க்கட்சிகள்) மத்திய வெளியுறவு அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் வேறு ஏதோ சில நாடுகள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அவர்களின் கட்சியில் அந்நியர்களின் முக்கியத்துவம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
அவர்களின் அனைத்து விஷயங்களும் இங்கே திணிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதனால் தான் அவர்கள் அங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் 20 ஆண்டுகளுக்கு அவர்கள் அங்கேயே தான் உட்கார்ந்து இருக்க போகிறார்கள்.
அவர்கள் (எதிர்க்கட்சி எம்.பி.க்கள்) பேசும் போது, நாங்கள் பொறுமையாக கேட்டோம். நீங்கள் எத்தனை பொய்கள் சொல்லி இருக்கிறீர்கள் என்பதை நாளை நான் இங்கே சொல்வேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
எவ்வளவு ஒரு முக்கியமான விஷயம் இங்கே விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் உண்மையை கேட்க மறுக்கிறார்கள். வெளியுறவு அமைச்சர் பேசும் போது இதுபோன்ற குறுக்கீடுகள் ஏற்புடையதா? எதிர்க்கட்சியினருக்கு சபாநாயகர் இதை புரிய வைக்க வேண்டும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.



மேலும்
-
மணிப்பூரில் ராணுவ சோதனையில் சிக்கிய ஆயுத குவியல்: 155 துப்பாக்கிகள், 1650 குண்டுகள் கண்டெடுப்பு
-
அழிவிற்கான ஆரம்பம் இது: நயினார் நாகேந்திரன் காட்டம்!
-
நல்லா படிச்சவரு டாக்டர்; சரியாக படிக்காத நான் துணை முதல்வர்; உதயநிதி வெளிப்படை!
-
ஆபரேஷன் சிந்துார் விவாதம்: காங்கிரஸை வெளுத்து வாங்கிய ஜெய்சங்கர்!
-
கன்னியாஸ்திரிகள் மீது புகார்: முதல்வர் கண்டனம்
-
பாம்பன் அருகே ஆட்டோ, சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து:2 பேர் பலி