ஆக்கிரமிப்பில் 48 காலனி வாரிய குடியிருப்பு நிலம்: அகற்ற கோரிக்கை

சிவகங்கை: சிவகங்கை அருகே 48 காலனியில் பழுதடைந்த அரசு குடியிருப்பு அகற்றப்பட்ட பின் நிலத்தை பாதுகாக்காததால் செடிகள் வளர்ர்ந்து ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

1970ம் ஆண்டு 2 ஏக்கரில் சிவகங்கையில் ஆயுதப்படை செல்லும் ரோட்டில் உள்ள 48 காலனியில் அரசு ஊழியர்களுக்கு 48 வீடுகள் கட்டப்பட்டது. 46 ஆண்டுகளான இந்தவீடுகளை வீட்டு வசதி வாரிய நிர்வாகத் தினர் பராமரிக்காமல் விட்டுவிட்டனர்.

காலப்போக்கில் வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து புதர் மண்டியது. வீடுகளை ஆய்வு செய்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தினர் 2024ம் ஆண்டு அனைத்து வீடு களையும் அகற்றினர். வேலி எதுவும் இங்கு அமைக்காததால் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடத்திற்குள் கடைகள் வைத்து ஆக்கிரமிக்க துவங்கிவிட்டனர்.

நகராட்சி வார்டு கவுன்சிலர் சரவணன் (தி.மு.க.,): அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப் பாளர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். அங்கு மீண்டும் குடி யிருப்பு கட்ட முடியாத பட்சத்தில், வேறு ஏதேனும் அரசு அலு வலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் பொற்கொடி யிடம் மனு அளித்து உள்ளேன், என்றார்.

Advertisement